• Nov 24 2026

அமரன் செய்த புதிய சாதனை! ராஜ் கமல் நிறுவனம் வெளியிட்ட வீடியோ....

shali / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் அமரன். இந்த திரைப்படம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையினை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் முகுந்த் வரதராஜனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவரின் மனைவியாக நடிகை சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


கடந்த தீபாவளியை முன்னிட்டு 31ம் திகதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தமையால் சிறப்பான விமர்சனங்களே பெற்று வந்தது. மேலும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. 


இந்நிலையில் இந்த படத்தில் வெளியான மின்னலே பாடல், வெண்ணிலவு சாரல் நீ பாடல் என்பன ரசிகர்களினால் விரும்பி பார்க்கப்பட்டு வந்தநிலையில் ரீல்ஸ், டிஃடோக், வீடியோஸ் என ரசிகர்கள் செய்து போட்டு இன்று வரையும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த அமரன் திரைப்படத்தினை தயாரித்த கமலஹாசன் தனது ராஜ் கமல் நிறுவனத்தினால் 1 மில்லியன் கடந்து ரீல்ஸ் வீடியோ வெளியானது குறித்து நன்றி தெரிவித்துள்ளனர். 



 

Advertisement

Advertisement