• May 03 2024

புளூசட்டை மாறன் மாதிரி அறிவுஜீவிகளை நம்பாதீங்க.. ரசிகர்களிடம் கெஞ்சிய விஜய் ஆண்டனி..!

Sivalingam / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனி நடித்த ’ரோமியோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை கேலி செய்து புளூசட்டை மாறன் விமர்சனம் செய்திருந்த நிலையில் புளூசட்டை  மாறன் போன்ற அறிவு ஜீவிகளை நம்பாதீர்கள் என்றும் ’ரோமியோ’ நல்ல படம் தயவு செய்து திரையரங்குகளில் சென்று பாருங்கள் என்றும் விஜய் ஆண்டனி தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் கெஞ்சி ஒரு பதிவை செய்துள்ளார். 

திரைப்பட விமர்சகர் புளூசட்டை மாறன் ஒரு படத்தை விமர்சனம் செய்யாமல் அந்த படத்தில் நடித்த நடிகர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதாகவும் தனக்கு பிடிக்காத நடிகர்களின் படங்கள் நன்றாக இருந்தாலும் கூட வேண்டும் என்றே அதற்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. 

மேலும் சில இத்துப்போன படங்களை எல்லாம் நல்ல படங்கள் என்று புளூசட்டை மாறன் பரிந்துரை செய்வார் என்றும் பெரும்பாலான ரசிகர்கள் ரசிக்கும் படங்கள் மோசமாக உள்ளது என்று அவர் விமர்சனம் செய்வார் என்றும் கூறப்பட்டு வருகிறது. 



இந்த நிலையில் சமீபத்தில் வெளியான விஜய் ஆண்டனி நடித்த ’ரோமியோ’ படத்தை கிண்டல் செய்து புளூசட்டை மாறன் விமர்சனம் செய்துள்ள நிலையில் விஜய் ஆண்டனி இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ’பல நல்ல படங்களை தவறாக விமர்சித்து கொல்லும் புளூசட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்பி ’ரோமியோ’ போன்ற நல்ல பல நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

என் அன்பு மக்களே, ’ரோமியோ’ ஒரு நல்ல படம் போய் பாருங்க புரியும், ரோமியோவை ’அன்பே சிவம்’ ஆக்கிடாதீங்க என்று தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement