• Jun 01 2026

ரிலீஸுக்கு முன்பே லீக்கான தகவல்… ‘பெத்தி’ படத்தில் மறைந்திருக்கும் ட்விஸ்ட் இதுதான்.!

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘பெத்தி’ தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம்சரண் கதாநாயகனாக நடித்துள்ளார். 

அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். இசை அமைப்பாளராக உலகப் புகழ்பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றுவது இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.


‘பெத்தி’ படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக ரஹ்மானின் இசை மற்றும் பாடல்களின் தனித்துவமான பாணி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘பெத்தி’ திரைப்படத்தின் டிரெய்லர் வரும் மே 18ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் வெளியீட்டு விழா போபால் நகரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

மேலும், அந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடி இசை நிகழ்ச்சியும் நடத்த உள்ளார் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement