நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா செல்வமணி தனது மகள் அன்ஷுவின் கல்வி சாதனையை சமூக வலைதளத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளார். அமெரிக்காவின் பிரபலமான Indiana University Bloomington பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் சிறப்புப் பிரிவில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்ற அன்ஷு, அதையும் டிஸ்டிங்ஷன் (Distinction) உடன் முடித்து குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ரோஜா செல்வமணி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், பட்டமளிப்பு விழாவில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தனது மகள் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், ஒழுக்கமும் இணைந்த காரணத்தால் இந்த உயர்ந்த நிலையை அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆண்டு அன்னையர் தினம் தமக்கு மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் மறக்க முடியாத நாளாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அன்ஷு, பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். சமத்துவம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தலைமைத்துவ விருது, சிறந்த மாணவர் தலைவர் விருது, கல்விச் சிறப்பு விருது, பலமுறை டீன்ஸ் லிஸ்ட் கௌரவங்கள் மற்றும் ஃபவுண்டர்ஸ் ஸ்காலர் அங்கீகாரம் உள்ளிட்ட பல சாதனைகள் அவரை தனித்துவமாக்கியுள்ளன.
குறிப்பாக, Indiana University வழங்கும் Herman B Wells சிறந்த மூத்த மாணவர் விருதைப் பெற்ற முதல் இந்திய மாணவி என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
தனது மகளின் இந்த வெற்றியைப் பற்றி பேசுகையில், ஒரு தாய்க்கு தனது குழந்தையின் வளர்ச்சியை காண்பதை விட பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை என்று ரோஜா செல்வமணி உணர்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு வெளியானதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் ரோஜா குடும்பத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Listen News!