• May 11 2026

முதல்வர் விஜய் பதவியேற்ற பின் துபாயில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்.! லீக்கான வீடியோ

shali / 1 hour ago

Advertisement

Listen News!

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றதைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது. அவரது பதவியேற்பு நிகழ்வுக்குப் பிறகு, இன்று காலை 9.30 மணிக்கு 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று, அதில் பல முக்கிய விவாதங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


புதிய அரசு அமைந்துள்ள நிலையில், சட்டமன்ற நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், உலக அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் ஒரு சிறப்பு நிகழ்வும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. துபாயில் உயரமான கட்டிடமாக அறியப்படும் புகழ்பெற்ற புர்ஜ் கலிஃபா கோபுரத்தில் விஜய்யின் புகைப்படம் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி, ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

பலரும் இதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக பாராட்டி வருகின்றனர். உலகின் எந்த நாட்டிலும் ஒரு முதலமைச்சருக்கு இவ்வளவு பெரிய அளவில் வெளிநாட்டில் மரியாதை கிடைத்ததில்லை எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

எது எப்படி இருந்தாலும், இந்த நிகழ்வு விஜய்யின் அரசியல் பயணத்துக்கு உலகளாவிய கவனத்தை பெற்றுத் தந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

Advertisement

Advertisement