தமிழ்நாட்டின் முதலமைச்சராக நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய், நேற்றைய தினம் முதல்வராக பதவியேற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகை த்ரிஷா கிருஷ்ணன் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவிற்கு, தனது தாயார் உமா கிருஷ்ணனுடன் வந்திருந்த திரிஷா, விஜயின் குடும்பத்தினருடன் முன் வரிசையில் அமர்ந்து விழாவை கவனித்தார். அவரது வருகை ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், விஜய்யின் பதவியேற்பு விழா முடிந்து வெளியேறியபோது, திரிஷாவை சுற்றி ரசிகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பெருமளவில் திரண்டு, அவரிடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மேலும், விஜய் முதல்வராக பதவியேற்றது குறித்து அவரது கருத்தை கேட்க பலரும் முயன்றதால் அங்கு சிறிய பரபரப்பும் ஏற்பட்டது.

ஆனால், எந்த பதற்றமும் காட்டாமல் சிரித்த முகத்துடன் அமைதியாக நடந்துசென்ற திரிஷா, ரசிகர்களின் கவனத்தை மீண்டும் பெற்றார். கூட்ட நெரிசலிலும் பொறுமையாக நடந்து கொண்ட அவரது வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த விழாவில் திரிஷா அணிந்திருந்த நீலப்பச்சை மற்றும் தங்க நிற சேலை, ஜாஸ்மின் பூ, வைர ஆபரணங்கள் மற்றும் எளிமையான அலங்காரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது..
மேலும் திரிஷா நடிப்பில் அடுத்ததாக கருப்பு திரைப்படம் வெளியாகவுள்ளது. அதில் நடிகர் சூர்யாவுடன் நடித்துள்ளார்.. இந்த படம் மே 14, 2026 அன்று வெளியாகவுள்ளது.
அதேவேளை, விஜயின் கடைசி திரைப்படமாக கூறப்படும் ஜனநாயகன் தற்போது தணிக்கை சிக்கலால் வெளியாகாமல் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
#WATCH | Chennai, Tamil Nadu: Actor Trisha Krishnan leaves from the Jawaharlal Nehru Stadium in Chennai after attending the oath-taking ceremony of TVK Chief Vijay as the Chief Minister of Tamil Nadu. pic.twitter.com/p9ah5mn0Om
Listen News!