• May 11 2026

உதயநிதி ஸ்டாலின் எனும் நான்..! முதல் நாளே ஆட்டம் கண்ட சட்டப்பேரவை

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பின்பு நடைபெற்ற முதலாவது கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டமாக கூடியது.. இதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அவைக்கு வந்த வண்ணம் காணப்பட்டனர்.

இந்த கூட்டத்தில் தற்காலிக சபாநாயகர் கருப்பையா புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

முதலில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், பின்னர் கட்சி தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள், முன்னாள் துணை முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசு தலைமை கொறடா ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக்கொள்கின்றனர். அதன் பின்னர் தமிழ் அகர வரிசைப்படி மற்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் செய்துள்ளனர்.


உறுதிமொழி எடுக்கும் போது உறுப்பினர்கள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில், “உளமாற உறுதி கூறுகிறேன்” அல்லது “கடவுள் அறிய உறுதி கூறுகிறேன்” என்ற வாசகங்களில் ஒன்றை தேர்வு செய்து உறுதிமொழி ஏற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினின்  உதயநிதியும் உறுதிமொழி அளித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

'சட்டமன்ற பேரவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பெற்ற உதயநிதி ஸ்டாலின் எனும் நான், சட்ட முறைப்படி நிறுவ பெற்றுள்ள இந்திய அரசமைப்பு சட்டத்தில் உண்மையான நம்பிக்கையும்  பற்றுருதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் இறையாண்மையையும் உரிமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ள இருக்கும் கடமையையும் நேர்மையுடன் நிறைவேற்றுவேன் என்றும் உளமாற உறுதி கூறுகிறேன்' என்று வாக்குறுதி அளித்துள்ளார். 


Advertisement

Advertisement