• May 11 2026

அண்ணன் - தங்கச்சி உறவுனா இப்படிதான் இருக்கணும்..! வேலையை காட்டிய பிரபல சேனல்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழக அரசியல் வரலாற்றில் விஜயின் பதவியேற்பு விழா மிக முக்கிய நாளாக அமைந்தது. இது உலக அளவில் மிகப்பெரிய பேசுபொருளாக காணப்பட்டது. அதேபோல் விஜயின் பதவியேற்பு விழாவில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஏற்கனவே விஜயின் மனைவி சங்கீதா அவரை விவாகரத்து செய்யவுள்ளதாக வெளியான தகவல்களிலிருந்து, த்ரிஷாவின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதுவும் பல விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது.

அதற்கு பின்பு விஜய்யும் த்ரிஷாவும் ஒன்றாக திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல், அவர்கள் இருவரும் ஒரே நிற ஆடையில் கலந்து கொண்டதும் பல கேள்விகள் எழுவதற்கு காரணமாக அமைந்தது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விஜய் வெற்றி பெற்ற நாளே த்ரிஷாவின் பிறந்தநாளாக இருந்தது. மேலும், விஜய் வெற்றி பெற்றதும் த்ரிஷா அங்கு சென்று அவரை சந்தித்ததும், வெளியேறும் போது அவர் காட்டிய சைகையும் சமூக வலைதளங்களில் வைரலானது.


அது மட்டும் இல்லாமல், நேற்றைய தினம் முதல்வராக விஜய் பதவியேற்ற போது அவருடைய குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் த்ரிஷாவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அவருக்கு முதல் வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது. மேலும், மேடையில் விஜய் பேசும் போது த்ரிஷா கண்கலங்கிய காட்சிகளும் வைரலானது.

இந்த நிலையில், விஜய் முதல்வராக பதவியேற்ற காட்சி நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதன் போது பிரபல செய்தி ஊடகம் ஒன்று, விஜய் பதவி பிரமாணம் செய்த போது இடையில் ஒரு விளம்பரத்தை ஒளிபரப்பியது. அந்த விளம்பரம் த்ரிஷாவைச் சேர்ந்ததாக இருந்தது.


மேலும் அதில் “அப்படி போடு, அப்படி போடு” பாடலை ஒலிக்கச் செய்து, த்ரிஷாவின் விளம்பரத்தையும் அருகில் காட்டியுள்ளனர். தற்போது இது தொடர்பான காணொளி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் விஜய்க்கும் த்ரிஷாவுக்கும் இடையில் என்ன உறவு என பலரும் விவாதித்து வரும் நிலையில், ஒரு சிலர் அவர்களுடைய உறவு அண்ணன் - தங்கச்சி போல கூட இருக்கலாம். பதவியேற்பு விழாவில் அண்ணனுக்காக தங்கச்சி உருகி அழுதிருக்கலாம் என்ற கோணத்திலும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement