• May 31 2026

CM விஜய்க்காக தினமும் அழுதோம்.. ஆனா இப்போ.? கண்கலங்கி பேசிய விஜய் வீட்டுப் பணிப்பெண்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிகழ்வு பலருக்கும் உணர்ச்சிகரமான தருணமாக மாறிய நிலையில், அவரது வீட்டில் வேலை பார்த்து வந்த குடும்பத்தின் உருக்கமான பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்த அந்த குடும்பத்தினர், “எங்களால இதை நினைச்சு கூட பார்க்க முடியல. கண்ணில தண்ணி தான் வருது” என்று உணர்ச்சியுடன் பேசியுள்ளனர்.

குறிப்பாக, அந்த குடும்பத்தின் தாயார் புற்றுநோய் சிகிச்சை பெற்றபோது விஜய் உதவி செய்ததாக தெரிவித்துள்ளனர். “எங்க அம்மாவுக்கு கேன்சர் வந்துச்சு. அப்போ அண்ணன் எங்களுக்கு பெரிய உதவி பண்ணார். வேலைக்காரங்க மாதிரி ஒருநாளும் எங்களை பார்த்ததே இல்ல. தங்கச்சி மாதிரி தான் பார்த்துக்கிட்டார்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.


மேலும், “லியோ சக்சஸ் மீட்டுக்கு அம்மா ஆபரேஷன் பண்ணி 40 நாள்லயே வந்திருந்தாங்க. அப்போ கூட அண்ணன் தனியா வந்து பேசினார். அவ்வளவு அன்பா நடந்துக்கிட்டார்” என்றும் தெரிவித்தனர்.

அந்த தாயார் பேசும்போது, “சிஎம் விஜய்க்காக நாங்க தினமும் சாமி வேண்டிக்கிட்டே இருந்தோம்.. அழுதோம்.. இப்போ அது நடந்துருச்சு. என் பையன் முதலமைச்சர் ஆயிட்டான்..அவன் எல்லாருக்கும் நல்லது செய்யணும்” என கண்கலங்கினார்.

மேலும், “நன்றி கடன் எல்லாம் இல்லை… அவர் என் பிள்ளை மாதிரி” என்று உருக்கமாக கூறியதும் அங்கிருந்த பலரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், “மக்களை குடும்பமாக பார்க்கும் மனிதர் விஜய்” என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement