த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றதைத் தொடர்ந்து, அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று காலை 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னையில் நடைபெற்றது. புதிய அரசின் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய்க்கு மத்திய அரசு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாதுகாப்பு ஏற்பாட்டின் கீழ், MP5 அதிநவீன துப்பாக்கிகளை ஏந்திய 55 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் அவரை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், முதலமைச்சரின் பாதுகாப்பு குழுவில் 10க்கும் மேற்பட்ட NSG கமாண்டோக்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த அதிரடி பாதுகாப்பு ஏற்பாடுகள், சமீபத்திய அரசியல் சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
முதலமைச்சரின் சுற்றுப்பயணங்கள், பொது நிகழ்வுகள் மற்றும் சட்டப்பேரவை நடவடிக்கைகள் அனைத்திலும் கடுமையான பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!