தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் ஜோசப் விஜய் தனது புதிய பொறுப்பை ஏற்று உடனடியாக அதிகாரபூர்வ பணிகளைத் தொடங்கியுள்ளார்.
பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே அரசு கோப்புகளில் கையெழுத்திட்டு நிர்வாக நடவடிக்கைகளை துரிதப்படுத்திய அவரது செயல்பாடு அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையிலும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக, “ஓபனிங்கில் செம அதிரடி” என பலரும் அவரது ஆரம்ப நடவடிக்கைகளை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச அளவிலும் விஜய்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அதில், “திரையில் ஊழல் அரசியல்வாதிகளை வீழ்த்திய விஜய், தற்போது நிஜ அரசியலிலும் மக்கள் நம்பிக்கையை பெற்று உயர்ந்துள்ளார். தமிழக மக்களின் ‘ஒரு விரல் புரட்சி’ புதிய வரலாற்றை உருவாக்கும் தருணத்தில் உள்ளது. மலேசியா–தமிழக உறவை மேலும் வலுப்படுத்தி, இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்து செய்தி அரசியலில் மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் புதிய நிர்வாகப் பயணம் தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்குமா என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Listen News!