• Jan 18 2025

வறண்ட மண்ணில் வசமாக சிக்கிய STR.. கமலுக்காக தனது வாக்குரிமையை தூக்கிப் போட்டாரா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்ற முடிந்த நிலையில், அதற்கு பிரபல சினிமா நட்சத்திரங்களும் பங்கேற்று தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருந்தார்கள்.

அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித் குமார், குஷ்பூ, திரிஷா, ஐஸ்வர்யா, சரத்குமார், ராதிகா, வரலட்சுமி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ், சசிகுமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், கமல்ஹாசன், சூர்யா என ஏராளமான சினிமா நட்சத்திரங்களும் தமது வாக்குகளை பதிவு செய்து ரசிகர்களுக்கும் ஓட்டு போடுமாறு தெரிவித்திருந்தார்கள்.

இளையதளபதி விஜய் இந்த தேர்தலுக்கு வாக்கு பதிவு செய்ய வருவாரா இல்லையா என கேள்வி எழுப்பட்டு வந்தது. அதற்கு காரணம் அவர் கோட் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தது தான். ஆனாலும் அவர் தனது வாக்கை பதிவு செய்வதற்காக  அதிரடியாக வந்திருந்தார் . அவர் கையில் சிறு காயம் இருந்ததும் அவதானிக்கப்பட்டது .


இந்த நிலையில், தமிழகத்தில் இடம்பெற்று முடிந்த தேர்தலுக்கு நடிகர் சிம்பு வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான காரணமும் வெளியாகி உள்ளது. 

அதாவது சுமார் 36 ஆண்டுகளுக்குப் பின்பு உலகநாயகன் கமலஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்தினம் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தான் தக் லைப். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. ஆனாலும் சில சில சர்ச்சைகளும் ஏற்பட்டு மறைகிறது.


இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் கமிட் ஆகினர். ஆனாலும்,  அவர்கள் அண்மையில் இந்த படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவர்கள் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில்  தக் லைப் படத்தில் நடிகர் சிம்பு நடித்துவரும் நிலையில், நேற்றைய தினம் அவர் ஷூட்டிங்  ஸ்பாட்டில்  இருந்ததன் காரணமாக அவரால் தனது வாக்கை பதிவு செய்ய வர முடியவில்லை என்றும், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது பாலைவனம் சார்ந்த ராஜஸ்தானில் இடம்பெற்று வருவதாகவும், சிம்பு தற்போது அங்க தான் உள்ளார் எனவும் கூறப்படுகிறது.




Advertisement

Advertisement