தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக காணப்பட்ட நடிகர் விஜய், படங்களில் நடிக்கும் போதே அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வந்தார். அதன் பின்னர் 2024 ஆம் ஆண்டு “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை நிறுவினார்.
இந்த கட்சி தொடங்கி சுமார் இரண்டு ஆண்டுகளிலேயே தமிழக முதல்வராகியுள்ளார் விஜய். இதற்காக நேற்றைய தினம் பதவியேற்பு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த தருணம் தமிழ்நாட்டில் பலரும் எதிர்பார்த்த ஒன்றாகவும், பலராலும் பாராட்டப்பட்டதாகவும் அமைந்தது.
அதே நேரத்தில், தமிழக முதல்வர் விஜயின் பதவியேற்பு விழாவில் நடிகை த்ரிஷா கலந்து கொண்டது பலருடைய கவனத்தையும் ஈர்த்தது. அதிலும் குறிப்பாக, அவர் பதவியேற்பு விழாவிற்கு வந்த பிரபலங்களை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்ததும், முதல் வரிசையில் அமர்ந்ததும் விவாதங்களை கிளப்பியது.
இந்த நிலையில், நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயின் பதவியேற்பு விழாவில் அணிந்து வந்த புடவையுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், அதற்கு அவர் போட்ட கேப்ஷன் பல விவாதங்களை எழுப்பியுள்ளது.

அதாவது, “Love Is Always Louder” என குறிப்பிட்டுள்ளார். அதாவது, “அன்பின் சத்தம்தான் எப்போதும் அதிகம்” என்ற பொருளில் அவர் எழுதிய இந்த வாசகம், சமீபத்தில் அவரது வருகையை சுற்றி சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு மறைமுக பதிலாக இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பதவியேற்பு விழாவில் த்ரிஷா நீலப்பச்சை கலந்த பட்டுச் சேலையில் மிகவும் அழகாக தோன்றி இருந்தார்.. மேலும் தங்க நிற வடிவமைப்புகளுடன் கூடிய அந்த சேலைக்கு ஏற்ற பிளவுஸை அணிந்திருந்தார்.
மேலும், மல்லிகைப்பூவால் அலங்கரிக்கப்பட்ட கொண்டை, மென்மையான மேக்கப் மற்றும் சிவப்பு கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் ஆகியவற்றுடன் பாரம்பரிய தோற்றத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தற்போது த்ரிஷாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!