பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘சாந்த் மேரா தில்’ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் ரசிகர்களின் மனதை கவரும் வகையில் உருவாகியுள்ள இந்த படத்தில் அனன்யா பாண்டேவுடன் நடிகர் லக்ஷ்யா இணைந்து நடித்துள்ளார். காதல், உணர்ச்சி, பிரிவு மற்றும் உறவுகளின் நுணுக்கங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

விவேக் சோனி இயக்கியுள்ள இந்த படத்தினை ஹிரூ யாஷ் ஜோஹர், கரண் ஜோஹர் மற்றும் மரிஜ்கே டிசோசா ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். குறிப்பாக, இளைஞர்களை கவரும் விதமாக காட்சிகள் மற்றும் இசை அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘சாந்த் மேரா தில்’ படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிரெய்லரில் அனன்யா பாண்டே மற்றும் லக்ஷ்யா இடையேயான காதல் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதேசமயம், படத்தில் பல உணர்ச்சிபூர்வமான தருணங்களும் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
வருகிற 22ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படம், இளம் தலைமுறையினரின் காதல் உணர்வுகளை பிரதிபலிக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரெய்லருக்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படமும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுமா என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
This feels like a BLOCKBUSTER trailer in every sense ❤️🔥
— Ramesh Bala (@rameshlaus) May 11, 2026
#ChandMeraDil trailer raises the excitement to a whole new level.
The chemistry between #AnanyaPanday and #Lakshya looks fresh, intense and emotionally real ✨
Vivek Soni seems to have crafted a love story filled with… pic.twitter.com/wYVHv8Bljs
Listen News!