• Jul 27 2024

டூமச் அழகில் ஜொலிக்கும் லியோ ஜனனி... குவியும் ஹார்ட்கள்! வைரல் போட்டோஸ்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

இலங்கையில் பிரபல நியூஸ் சேனலில் பணிபுரிந்த ஜனனி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு வந்தார். அதன்படியே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இதை அடுத்து ஈழத்து பெண்ணான ஜனனிக்கு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கின. அதன்படி தனது முதலாவது படமே விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

லியோ படத்தில் விஜய், திரிஷா ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழின் உச்சிக்கே சென்றார். அதற்குப் பிறகு இவர் லியோ ஜனனி என்றுதான் ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.


எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அதிலும் அவர் ஏனையவர்களை போல் அல்லாமல் கலாச்சார ஆடைகளையே அதிகமாக அணிந்து புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்த நிலையில், தற்போது சேலையில் அவர் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.  குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement