விஜய் ஒரு பக்கம் அரசியலில் குதித்துள்ள நிலையில் அஜித் இன்னொரு பக்கம் சர்ஜரி செய்ய இருப்பதால் இருவருமே சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் திரை உலகில் இருக்க மாட்டார்கள் என்று கூறப்படுவது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ படத்துடன் அவர் திரையுலகில் இருந்து விலகப் போவதாகவும் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் கூறப்பட்டது. எனவே ’தளபதி 69’ திரைப்படம் அநேகமாக அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதற்கு பிறகு விஜய் படத்தை பார்க்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல் அஜித் தற்போது ’விடாமுயற்’ மற்றும் ’குட் பேட் அக்லி’ ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் இந்த இரண்டு படங்களையும் முடித்த பின்னர் அவர் ஒரு சர்ஜரி செய்ய இருப்பதாகவும் அதன் பின் அவர் ஒரு ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்கு புதிய திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
எனவே ஒரே நேரத்தில் விஜய் அஜித் இரண்டு பேருமே வெவ்வேறு காரணங்களால் சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலக இருப்பதாக கூறப்படுவது அவரவர் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Listen News!