‘கோட்’ படத்தை முடித்தவுடன் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருந்த நிலையில் அந்த படம் கிட்டத்தட்ட ட்ராப் என்று தகவல் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடித்த ‘கோட்’ படத்தை இயக்கி முடித்து உள்ள வெங்கட் பிரபு, இந்த படம் ரிலீஸ் ஆனவுடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படம் ட்ராப் என்றும் இதற்கு சில காரணங்கள் கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது. முதல் காரணமாக சிவகார்த்திகேயன் அதிக சம்பளம் கேட்டதாகவும் அதனை தர சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தர மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இன்னொரு காரணமாக வெங்கட் பிரபு தற்போது வரை திரைக்கதையை தயார் செய்யவில்லை என்றும் அதனால் தான் இந்த படம் டிராப் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் இன்னொரு காரணம் கூறப்படுவது தான் கோலிவுட் திரை உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ‘கோட்’ படத்தின் பாடல்கள் மற்றும் டீஏஜிங் டெக்னாலஜி ஆகியவை நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றதை அடுத்து ‘கோட்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாது என்றும் கண்டிப்பாக வெங்கட் பிரபு இந்த படத்தை சொதப்பி தான் வைத்திருப்பார் என்றும் ஒரு வதந்தி பரவி வருவதையடுத்து சத்யஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து பின்வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே உண்மையான காரணம் என்ன என்று தெரியவில்லை என்றாலும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன், சத்யஜோதி பிலிம்ஸ் இணையும் படம் டிராப் என்று மட்டும் கிட்டத்தட்ட உறுதியாக தெரிய வந்துள்ளது.
Listen News!