• Jan 18 2025

எஸ்.ஜே.சூர்யா ஒரு பைத்தியம்.. நடிப்பு அரக்கனை விமர்சனம் செய்த விக்னேஷ் சிவன்..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’எல்ஐசி’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடித்து வரும் நிலையில், எஸ்.ஜே.சூர்யா  ஒரு பைத்தியம் என விக்னேஷ் இவன் விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா உட்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ’எல்ஐசி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கோவை மற்றும் உடுமலைப்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் எஸ் ஜே சூர்யா சம்பந்தப்பட்ட காட்சியின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

அவருடன் இணைந்து பணியாற்றியது குறித்த அனுபவத்தை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் ’எஸ் ஜே சூர்யா ஒரு நடிப்பு பைத்தியம், எனது திரையுலக வாழ்க்கையில் இப்படி ஒரு அர்ப்பணிப்பு உள்ள நடிகரை நான் பார்த்ததே இல்லை என்று தெரிவித்துள்ளார்.



மேலும் அவருக்கு இருக்கிற திறமை மற்றும் அனுபவம். நடிப்பு திறமைக்கு இன்னும் மிக உயரத்திற்கு அவர் செல்ல வேண்டியவர் என்றும் கண்டிப்பாக அவருடைய கனவை விட பல மடங்கு அவர் சாதிப்பார் என்றும் அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் எஸ் ஏ சூர்யாவுடன் இணைந்த இடத்தை புகைப்படத்தையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த நிலையில் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் சீமான் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.   

Advertisement

Advertisement