• Jan 18 2025

ஒரு ஆம்லெட் விலை தெரியுமா? நடிப்பு தேவையில்ல இந்த தொழிலே போதுமே... கடற்கரையில் இருந்து கல்லாகட்டும் நடிகை சிம்ரன்

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகை சிம்ரன் சினிமா திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை ஆவார். திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரன் தற்போது ஹோட்டல் பிசினஸ் செய்து வருகிறார். 

கிழக்கு கடற்கரை சாலையும் கோட்கா பை சிம்ரன் எனும் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஹோட்டல் காலை 11மணிக்கு துவங்கி இரவு 11மணி வரை செயல்படுகிறது. உணவுகள் அனைத்தும் ஐகோலிட்டியாகத்தான் இருக்குமாம். சிம்ரனின் இந்த ஹோட்டலில் இரண்டு பேர் அமர்ந்து சாப்பிட, டேபிளை புக் பண்ணினால் ரூ. 700 ஆகுமாம். மேலும் இந்த ஹோட்டலில் ஆம்லெட் விலை மட்டுமே ரூ. 300 இருந்து ஆரம்பம் என்கின்றனர்.


சாதாரணமான கார்லிக் பிரெட்டின் விலை 130 ஆகுமாம். பேபிகார்ன் ரூ. 280, சிக்கன் லாலிபாப் ரூ. 280க்கு விற்பனை செய்யப்படுகிறது. வறுத்த நண்டு ரூ. 380 விற்கப்படுகிறது. மேலும் அனைத்து விதமான சைவ உணவும் சேர்ந்த ஒரு தட்டின் விலை ரூ. 1000 ஆகுமாம். அதே போல் அனைத்து அசைவ உணவுகள் சேர்ந்த தட்டின் விலை ரூ. 1500 என குறிப்பிடப்பட்டுள்ளது. சிம்ரனின் இந்த ஹோட்டலில் சாதாரண ஐஸ்க்ரீம் விலை மட்டுமே ரூ. 150 இருந்து துவங்குகிறது. இவ்வளவு ஏன் சாதாரண தாளித்த பருப்பு விலை மட்டுமே ரூ. 210 என விற்பனை செய்யப்படுகிறது.


தலைசுற்ற வைக்கும் வகையில் சிம்ரனின் ஹோட்டல் மெனு கார்டு அமைந்திருந்தாலும், கடற்கரை சாலையில் இந்த ஹோட்டல் இருப்பதால் நன்றாகவே கல்லா கட்டி வருகிறது என கூறப்படுகிறது. இந்த ஹோட்டல் மூலமாக லட்சங்களில் சம்பாதித்து வருகிறாராம் நடிகை சிம்ரன்.

Advertisement

Advertisement