• Jul 27 2025

இதுக்கு மாத்தாமலே இருந்திருக்கலாம்.. ’எல்.ஐ.சி.’ டைட்டிலை மாற்றிய விக்னேஷ்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற டைட்டிலில் ஒரு திரைப்படம் உருவாகி வந்தது என்பதும் இந்த டைட்டிலை ’எல்ஐசி’ என்று சுருக்கமாக அழைத்து வந்தனர் என்பதும் தெரிந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்று வந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் எல்ஐசி டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்த எல்ஐசி நிறுவனம் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் டைட்டிலை மாற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து இந்த படத்தின் டைட்டில் மாற்றப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக புதிய டைட்டிலை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். ’லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற பழைய டைட்டிலை ’லைப் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்று மாற்றி ’எல்ஐசி’ என்பதற்கு பதிலாக ’எல்ஐகே’ என்று விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். இப்படி ஒரு டைட்டிலை மாற்றுவதற்கு மாற்றாமலேயே இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி,  யோகி பாபு, கவுரி கிஷான், ராதாரவி,  உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.


Advertisement

Advertisement