• Oct 13 2024

ராஜியால் மீனாவுக்கு மீண்டும் பிரச்சனை.. ஹனிமூனுக்கு செல்ல மறுக்கும் சரவணன்.. தங்கமயில் அதிர்ச்சி..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் செந்தில் மற்றும் கதிர் ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர், ஒருவரை ஒருவர் ரகசியத்தை வெளிப்படுத்தியதை கேலியும் கிண்டலுமாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக ராஜி மற்றும் மீனா பேசுகின்றனர்.

ராஜி நீண்ட ஆலோசனையில் இருக்கும் நிலையில் மீனா என்னவென்று கேட்க, அதற்கு மறுபடியும் எனக்கு டியூஷன் ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கேட்கிறார். ’அம்மா தாயே டியூஷன் பிரச்சனையால் ஏற்பட்ட கஷ்டம் பத்தாதா, மறுபடியும் என்னை சிக்கலில் மாட்டி விடாதே’ என்று சொல்ல ’இல்லை இந்த முறை யாருக்கும் தெரியாமல் நான் பார்த்து கொள்கிறேன், கதிர் எனக்க்காக கஷ்டப்படுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை, எனக்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும், அப்படியே நான் மாட்டினாலும் உங்கள் பெயரை நான் சொல்ல மாட்டேன்’ என்று ராஜி கூற மீனா அரைமனதுடன் சரி என்று கூறுகிறார். இதனால் மீனாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் பாண்டியன் தனது குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து சரவணன் ஹனிமூன் செல்ல அனுமதி அளிக்கிறார். நீ வேலை செய்யும் இடத்தில் மூன்று நாள் லீவு சொல்லிவிடு, ஹனிமூன் சந்தோஷமாக சென்று வா’ என்று கூற, சரவணன் அதற்கு அதிருப்தி அடைகிறார். எனக்கு முன்னாடி இரண்டு தம்பிகளுக்கு திருமணம் ஆகி விட்டது, அவர்கள் ஹனிமூன் செல்லாமல் நான் மட்டும் எப்படி ஹனிமூன் செல்வது’ என்று கூற இது குறித்த சில வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது.



கடைசியில் மற்ற இருவரும் ஹனிமூன் செல்வது பற்றி எதுவுமே சொல்லாமல் சரவணன் தங்கமயில் மட்டும் ஹனிமூன் செல்லட்டும் என்று பாண்டியன் கூறி சென்றுவிடுகிறார்.  இதனால் அதிருப்தி அடைந்த சரவணன் ’அப்படியெல்லாம் என்னால் மட்டும் தனியாக செல்ல முடியாது, நீங்களும் ஹனிமூன் செல்ல வேண்டும் என்று தம்பிகளிடம் சொல்கிறார் சரவணன்.

ஆனால் செந்தில் , கதிர் இருவரும் ’அதெல்லாம் வேண்டாம், அப்பா ஒப்புக்கொள்ள மாட்டார், உங்களுக்கு அனுமதி அளித்ததே பெரிய விஷயம், நீங்கள் சென்று வாருங்கள்’ என்று கூறுகிறார்கள். ஆனால் சரவணன், தம்பிகள் செல்லாமல் ஹனிமூன் செல்ல மாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பதுடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

நாளைய எபிசோடில் தங்கமயில் இடமும் அவர் இதையே சொல்கிறார், தம்பிகள் இருவரும் ஹனிமூன் செல்லாமல் நாம் மட்டும் செல்வது நன்றாக இருக்காது என்று கூற, தங்கமயில் அதிர்ச்சி அடைந்து ’இப்ப நாம போறோமா இல்லையா’ என்று  கேட்கிறார்.

Advertisement