• Aug 14 2025

தர்ஷன் ஹீரோவாகும் ‘Surrender’படம் வெளியீட்டிற்கு தயாராகிறது...!வைரலாகும் வீடியோ..!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற தர்ஷன், தற்போது ஹீரோவாக தனது முழுமையான திரை பயணத்தைத் தொடக்கிறார். பல வருடங்களாக காத்திருந்த இந்த வாய்ப்பு, அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


‘Surrender’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், அப்பிட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் பிரமாண்ட தயாரிப்பாக பெருமையுடன் வெளியாக உள்ளது. விக்டர் குமார் தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் அறிவழகனின் முன்னாள் துணை இயக்குநராக பணியாற்றிய கௌதமன் கணபதி இயக்கியுள்ளார். இப்படம் ஒரு கிரைம்-ஆக்சன் திரில்லராகவும், உணர்வுப் பூர்வமான கதையமைப்புடன் உருவாகியுள்ளது.


திரைப்படத்தில் தர்ஷன் ஒரு கடமை மிகுந்த பொலீஸ் அதிகாரியாகப் பரபரப்பாக நடித்து வருகிறார். இவருடன் சேர்ந்து லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான ‘Surrender’ பட டீசர், ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வித்தியாசமான கதைக்களம், திரில்லான திரைக்காட்சிகள் மற்றும் தர்ஷனின் அழுத்தமான நடிப்பு படத்தின் மீது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Advertisement

Advertisement