தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனி அடையாளம் கொண்டவர் எஸ்.ஜே. சூர்யா. இயக்குநராகவும், நடிகராகவும், தற்போது பவர்புல் வில்லனாகவும் தனக்கென முத்திரை பதித்துவிட்ட இவர், சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில், தமிழ் சினிமா நடிகர் அஜித் மற்றும் தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஆகிய இருவரையும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு சந்தித்த அரிய தருணங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதன்போது, வாலி படம் பண்ணும் போது தான் நான் அஜித் சாரோட ரொம்ப close. அதுக்கப்புறம் அவங்க அவங்க வேலையில பிஸி ஆகிவிட்டோம். ரொம்ப நாளுக்கு அப்புறம் அவரை "விடாமுயற்சி" ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தேன். அது மறக்க முடியாத ஒரு மீட்டிங். தமிழ் நாட்டில் எப்புடி அஜித் சாரோ அதே மாதிரி தெலுங்கில பவன் கல்யாண் சார்." என்றார்.
மேலும், "அவரையும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு "கேம் சேஞ்சர்" ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தான் பார்த்தேன். அவர் என் மீது காட்டிய அன்பு மறக்க முடியாதது. சமீபத்தில் ரெண்டு பேரையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி." எனத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!