• Nov 22 2024

’வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுக்கு பதில் சூரி? வெற்றிமாறனுக்கு என்ன ஆச்சு?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாக இருந்த ’வாடிவாசல்’ திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தில் சூர்யாவுக்கு பதில் சூரி நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ’வாடிவாசல்’ திரைப்படத்தின் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியான போது சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் இந்த படம் தமிழ் திரை உலகில் ஒரு பேசப்படும் படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.



ஆனால் நான் சூரி நடித்த ’விடுதலை’ படத்தை இயக்க சென்ற வெற்றிமாறன் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இந்த படத்திற்காக பணிபுரிந்தார். அதுமட்டுமின்றி ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் பணியில் தற்போது இருப்பதால் அவர் ’வாடிவாசல்’ படத்தை எப்போது தொடங்குவார் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.



மேலும் விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான ’தளபதி 69’ படத்தை இயக்கும் வாய்ப்பை வெற்றிமாறனுக்கு கிடைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வாய்ப்பு கிடைத்துவிட்டால், சூர்யா நடிப்பில் உருவாகும் ’வாடிவாசல்’ படத்தை இயக்குவாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஏற்கனவே ’வாடிவாசல்’ படத்திற்காக சில கோடிகளை செலவு செய்துவிட்ட தயாரிப்பாளர் எஸ் தாணு இதனால் பெரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'தளபதி 69’ வாய்ப்பு கிடைத்தால் சூர்யா நடிப்பில் உருவாகும் ’வாடிவாசல்’ திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக அவருடைய உதவியாளர் இயக்குவார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ’தளபதி 69 ’வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் ’வாடிவாசல்’ படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்றும் ஆனால் அந்த படத்தில் சூர்யாவுக்கு பதில் சூரி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சூரி தற்போது சில படங்களில் ஹீரோவாக நடித்து வருவதும் அவரது படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பும் இருப்பதால் சூர்யா இடத்தில் சூரியை வைக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்பது இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே தெரிய வரும்.

Advertisement

Advertisement