• May 30 2026

லோகேஷ் - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணிக்கு விழுந்த அடி.. வசூலில் சொதப்பிய ‘29’

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘29’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 

நடிகர்கள் விது, ப்ரீத்தி அஸ்ரானி, மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் மற்றும் இளைஞர்களின் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.


படம் வெளியான முதல் நாளிலேயே பல விமர்சகர்கள் நேர்மறையான விமர்சனங்களை வழங்கினர். குறிப்பாக, ரத்னகுமாரின் எழுத்து மற்றும் யதார்த்தமான காட்சிப்படுத்தல் பாராட்டுகளை பெற்றது. இதனால், குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் நல்ல வசூலை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

சுமார் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ‘29’ திரைப்படம் முதல் மூன்று நாட்களிலேயே தனது செலவை மீட்டுவிடும் என தயாரிப்பு தரப்பு நம்பிக்கை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பாக்ஸ் ஆபீஸ் தகவல்களின் படி, படம் முதல் நாளில் சுமார் 30 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நல்ல விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும், பெரிய அளவிலான ஓப்பனிங் கிடைக்காதது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வார இறுதி நாட்களில் வசூல் உயருமா என்பதை ரசிகர்களும் திரையுலகினரும் கவனித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement