சின்மயி தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பிய ஒரு சம்பவத்தை கடுமையாக கண்டித்த அவர், பெண்களின் பாதுகாப்பு குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பெண் எம்.எல்.ஏ.வான பிந்து கிருஷ்ணா கலந்து கொண்டார். அப்போது அங்கு இருந்த செரியான் பிலிப், அவரை வரவேற்கும் பெயரில் திடீரென கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த காட்சியில், பிந்து கிருஷ்ணா அதிர்ச்சியடைந்து அவரை தடுக்க முயற்சிப்பதும் தெளிவாக பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சின்மயி தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பேசும்போது, “ஒரு பெண் சிரித்துக் கொண்டே அந்த இடத்திலிருந்து விலகிச் செல்கிறார் என்பதற்காக அது சம்மதம் என்று அர்த்தமல்ல” என வலியுறுத்தினார்.
மேலும், திரைப்படங்களில் காட்டப்படுவது போல எல்லா பெண்களும் உடனடியாக எதிர்த்து பேச முடியாது என்றும், வேலை, பாதுகாப்பு, சமூக அழுத்தம் போன்ற காரணங்களால் பலர் அமைதியாக இருக்க நேரிடுகிறது என்றும் கூறினார்.
அதேபோல் அரசியல் கட்சிகள் மற்றும் வேலை இடங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து அதிக விழிப்புணர்வு தேவை என்றும், பாலியல் தொல்லை தடுப்பு குழுக்கள் சரியாக செயல்பட வேண்டும் என்றும் சின்மயி தெரிவித்தார். தற்போது அவரது இந்த கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
Listen News!