தமிழக அரசியலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தனது முதல் சட்டசபைத் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அரசியல் வட்டாரங்களை அதிரவைத்தாலும், ஆட்சியமைக்க தேவையான முழுமையான ஆதரவு இன்னும் உறுதியாகாததால் முதலமைச்சர் பதவி குறித்த இழுபறி நீடித்து வருகிறது.

அரசியல் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விஜய் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என்று வேண்டி தவெக நிர்வாகிகள் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
குறிப்பாக சில நிர்வாகிகள் கோவிலில் முட்டி போட்டு பிரார்த்தனை செய்யும் காட்சிகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. “எங்க தலைவர் கண்டிப்பாக முதல்வராக வேண்டும்..” என்ற வாசகங்களுடன் தவெக நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அரசியல் நிலைமை எந்த திசையில் செல்லும், விஜய்க்கு தேவையான ஆதரவு கிடைக்குமா என்பது குறித்து மக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
Listen News!