• May 09 2026

தளபதி விஜய் முதல்வராவாரா? தூங்க முடியாமல் தவிக்கும் தமிழக மக்கள்.. அடுத்த மூவ் என்ன?

shali / 50 minutes ago

Advertisement

Listen News!

தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் சூழல் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், தனது முதல் சட்டசபைத் தேர்தலிலேயே 108 தொகுதிகளில் வெற்றி பெற்று அரசியல் வரலாற்றில் முக்கிய சாதனையை பதிவு செய்துள்ளது. 

ஆனால் ஆட்சியமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இன்னும் உறுதியாகாததால் அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்ததாக கூறப்பட்டாலும், மீதமுள்ள 2 இடங்களை பெறுவதற்கான அரசியல் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இதற்கிடையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “விஜய் தரப்பு குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளது” என குற்றம்சாட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கூட்டணி கட்சிகளின் ஆதரவு குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. விசிக தலைவர் திருமாவளவன் துணை முதலமைச்சராக பதவி கோரியதாகவும், இந்திய முஸ்லீம் லீக் ஆதரவு குறித்து குழப்பம் நிலவுவதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. 

இதனால் விஜய் முதல்வராக பதவியேற்பாரா அல்லது புதிய அரசியல் தடைகள் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. இன்று நடைபெறும் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கக்கூடியதாக பார்க்கப்படுகின்றன.

Advertisement

Advertisement