தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் பரபரப்பான சூழலில், இரண்டு எம்.எல்.ஏக்களை மட்டுமே கொண்டுள்ள விசிக ஆதரவு அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இன்னும் உறுதியாகாததால் அரசியல் களம் தொடர்ந்து பரபரப்பாக உள்ளது.
விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆதரவு அளித்தால் விஜய் முதலமைச்சராகும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. அதேசமயம், ஆதரவு மறுக்கப்பட்டால் ஆளுநர் ஆட்சி அமுலாகும் சூழலும் உருவாகலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

மேலும், விசிக ஆதரவுக்கு பதிலாக துணை முதலமைச்சர் பதவி அல்லது முக்கிய அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற பேச்சுகளும் பரவி வருகின்றன.
இந்த நிலையில் நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. “இந்த ஒரு சீட்.. ரெண்டு சீட் வச்சிருக்கிறவங்க பண்ற அட்ராசிட்டி இருக்கே.!!” என அவர் X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த நெட்டிசன் ஒருவர் “அதுவும் மக்கள் தீர்ப்பு தான் அதனை சாதாரணமாக எண்ண வேண்டாம்.” எனக் கூறிய நிலையில், சனம் ஷெட்டி “மக்கள் வாக்களித்தது MLA சீட்டுக்காக தான்; துணை முதலமைச்சர் பதவிக்காக அல்ல” என பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் தீவிரமாக பகிரப்பட்டு வருகிறது.
Listen News!