• Oct 04 2024

அவங்கள முதலில் செருப்பால அடிக்கணும்! மணி- பிரியங்கா பிரச்சினையில் வெங்கடேஷ் பட் கருத்து!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

முன்னாள் நடுவரான வெங்கடேஷ் பட் இணையத்தில் பேசி இருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தன்னை இன்னொரு பிரபல ஆங்கராக இருக்கும் போட்டியாளர் அடிமைப்படுத்துவதாக மணிமேகலை ஓப்பனாக அறிவித்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக பதிவிட்டார். கிட்டத்தட்ட ஒரு வாரங்களைக் கடந்தும் இந்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை. 


இதை பார்த்த ரசிகர்கள் பொதுவாகவே பேசிக் கொண்டே இருக்கும் பிரியங்கா மீது இருக்கும் குற்றச்சாட்டை முன்வைத்து மணிமேகலைக்கு இது நடந்திருக்கலாம் என அவருக்கு ஆதரவை பெருக்கினர். தொடர்ந்து பிரியங்கா மீது குற்றச்சாட்டுகள் பறந்தது. முக்கியமாக பேச வேண்டிய விஷயத்தை மீறி அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை முதல் தொழில் வாழ்க்கை வரை அனைத்தும் கேலிக்குள்ளாக்கப்பட்டது.


இதைத்தொடர்ந்து பிரியங்காவின் நண்பர்கள் ஆன குரோஷி, சுனிதா, அமீர், பாவ்னி, நிரூப், மது, பூஜா உள்ளிட்ட பிரபலங்கள் தொடர்ச்சியாக வீடியோக்கள் மற்றும் பதிவுகளின் மூலம் பிரியங்காவிற்கு ஆதரவை வெளியிட்டு வந்தனர். இவர்கள் அனைவரும் ஒரு சாராக இருந்து மணிமேகலைக்கு எதிராக பேசினர். ஆனால் இந்த பிரச்சினையில் ஒரு சிலர் மட்டும்தான் நடுநிலைமையாக இருந்து யாரையும் விமர்சிக்காமல் இதை பிரச்சினையாக கூடாது என பேசினர். 


இதில் முக்கியமாக புகழ், மாகாபா ஆனந்த் உள்ளிட்டோர் பிரச்சனையில் தலையிடாமல் இதை பெரிது படுத்த வேண்டாம் என பேசி இருப்பார்கள். அதுபோல நடுவரான தாமுவும் மணிமேகலைக்கு ஆதரவாக பேசினாலும் பிரியங்காவை எந்த இடத்திலும் அவர் விட்டுக் கொடுக்காமல் இருந்தார். அதுபோலவே தற்போது இந்த பிரச்சனை குறித்து வெங்கடேஷ் பட் பேசி இருக்கும் விவகாரம் வைரல் ஆகி வருகிறது. 


இந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்ட விஷயத்தை விட்டுவிட்டு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்து வீடியோக்களாக பதிவிட்டவர்களை செருப்பால் அடிக்கணும். பெண்களை மதிக்கணும். இது என் வீட்டில் இருக்கும் இரண்டு பெண்கள் போட்டுக் கொள்ளும் சண்டையாக தான் நான் பார்க்கிறேன். நாளை அவர்கள் சமாதானம் ஆகிவிடுவார்கள் என நம்புகிறேன். மணிமேகலை போட்ட வீடியோவிற்கு பதில் பிரியங்கா தான் சொல்ல வேண்டும். தேவையே இல்லாமல் இன்னொருவர் அதற்கு தான் என்ன நினைக்கிறோம் என வீடியோக்கள் வெளியிடுவது வேண்டாத வேலை. இருவருமே தங்களுடைய வாழ்க்கையில் கஷ்டப்பட்டு தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். இரண்டு பெண்களுமே நல்லவர்கள் தான் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.


Advertisement

Advertisement