• Jan 18 2025

வரலட்சுமியின் காதல் கணவரின் முன்னாள் மனைவி உலக அழகியா? பிரபலம் சொன்ன சீக்ரெட்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சரத்குமார் நடிகரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர் தான் நடிகை வரலட்சுமி. இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் நடிகை வரலட்சுமிக்கும் ஆர்ட் கேலரி உரிமையாளர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம்  நடைபெற்றுள்ளது.

இது தொடர்பிலான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

ஆனாலும், அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் அவருக்கு 11 வயதில் மகள் இருப்பதாகவும் ஷாக் தகவல் ஒன்று வெளியானது.

இந்த நிலையில், தற்போது நடிகைவரலட்சுமியின் திருமணம் குறித்து பலருக்கும் தெரியாத சில சீக்ரெட் விஷயங்களை பகிர்ந்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். அதன்படி அவர் கூறுகையில், 


தற்போது நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு 38 வயது. அவர் திருமணம் செய்து கொள்ள உள்ள நிக்கோலய் சச்தேவுக்கு 41 வயது. அவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான ஒருவர். அவரை வரலட்சுமி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உள்ளது கொஞ்சம் அதிர்ச்சியான விஷயம் தான்.

நிக்கோலய் சச்தேவ் மும்பையில் ஒரு மிகப்பெரிய ஆர்ட் கேலரியை நடத்தி வருகிறார். தன்னுடைய தந்தையை தொடர்ந்து அவர் இந்த தொழிலை செய்து வருகிறார்.

அவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு கவிதா என்கின்ற பெண்ணுடன் காதல் திருமணம் நடந்தது. அவர்கள் இருவருக்கும் 11 வயதில் மகளும் உள்ளார். கவிதா கலிபோர்னியா நாட்டு உலக அழகி. ஆனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விவாகரத்தும் பெற்றுள்ளார்கள். இதனால் வரலட்சுமி திருமணத்தில் எந்தவித பிரச்சனையும் வர வாய்ப்பில்லை.


அதேபோல் இவர்கள் இருவர்க்குள்ளும் ஈகோ தலையிடாமல் இருக்க வேண்டும். வரலட்சுமி எப்போதுமே தனித்து வாழ வேண்டும் என நினைப்பவர். வருங்கால கணவரிடமும் திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என கண்டிஷன் போட்டு தான் திருமணம் செய்து கொள்வார் என்று நினைக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

அத்துடன், வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் நடப்பதற்கு முன் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா விவாகரத்து குறித்து மிகவும் எமோஷனலாக பேசியிருந்தார். அதனையும் பயில்வான் சுட்டி காட்டி இருந்தார்.




 

Advertisement

Advertisement