• Apr 03 2025

என்னது ஜெனி இப்படி பண்ணிட்டாங்க...?? ஜோசேப்க்கு செம நோஸ் கட் ! இன்றைய எபிசோட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், புதிதாக ரெஸ்டாரண்ட் ஆரம்பிப்பதற்கான சமையல், அலங்காரம் என அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. விருந்தினர்களும் வர ஆரம்பிக்கின்றார்கள். ஜெனி வரவில்லை என பாக்கியா அழுகிறார்.

மறுப்பக்கம், ஜெனி வீட்டில் இருந்து வெளியேற அவரது அப்பாவும் அம்மாவும் தடுக்கிறார்கள். அவரது அப்பா கதவை அடைத்து வைத்துக் கொண்டு அவரை விடவில்லை. ஆனாலும் அவர் அவர்களை எதிர்த்து செல்கிறார். இதனால் ஜெனியின் அம்மா, அவள் செழியனை டைவோஸ் பண்ண மாட்டாள் என சொல்கிறார்.


இன்னொரு பக்கம் ஸ்கூல் பங்ஷனில் மினிஸ்டர் பங்கேற்பார் என கோபி காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவரது பிஏ க்கு போன் பண்ணி அதையும் உறுதி செய்கிறார். மினிஸ்டரும் கிளம்பி வருகிறார்.

பாக்கியா ரெஸ்டாரண்ட்டில் எல்லாரும் பரபரப்பாக இருக்க அங்கு ஜெனியும் குழந்தையும் காரில் வந்து இறங்குகிறார். பாக்கியா அவரை கட்டியணைத்து கண் கலங்குகிறார்.

இதை தொடர்ந்து ஜெனி உள்ளே வந்து ரெஸ்டாரண்டை பார்த்து எல்லாம் நல்லா இருக்கு என சொல்கிறார். ஜெனியின் குழந்தையை எல்லாரும் மாறி மாறி வாங்கிக் கொஞ்சிக் கொள்கிறார்கள். அதனை செழியன் ஏக்கத்துடன் பார்க்கிறார்.


Advertisement

Advertisement