• Apr 03 2025

மனோஜ் வாழ்க்கையில் மீண்டும் வந்த ஓடிப்போன காதலி..? சிறகடிக்க சீரியலில் புது ட்விஸ்ட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான க்குளு கிடைத்துள்ளது.

இந்த சீரியலில் மனோஜாக நடிக்கும் நடிகர் ஸ்ரீதேவா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதாவது அதில் ஏற்கனவே மனோஜை காதலித்து அவரிடம் இருந்து 27 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு போன காதலியே மீண்டும் வந்திருக்கும் நிலையில், அவருடன் ரில்ஸ் வெளியிட்டுள்ளார் மனோஜ்.

இவ்வாறு சிறகடிக்க ஆசை சீரியலில் இத்தனை நாட்களாக அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருந்த மனோஜ், வீட்டாரை ஏமாற்றிய விடயங்கள்  ஒவ்வொன்றாக அனைவருக்கும் தெரிய வருகிறது.


இந்த நிலையில், ஆரம்பத்தில் மனோஜை காதலித்து 27 லட்சம் ரூபாவை  ஏமாற்றி ஓடிய ஜீவா தற்போது மீண்டும் சூட்டிங்கிற்கு வந்திருக்கிறார். அவருடன் தான் ஸ்ரீ தேவா ரில்ஸ் வீடியோவும் வெளியிட்டுள்ளார்.


இவ்வாறான நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் கதையில் அதிரடியான மாற்றம் நடக்கப் போகிறதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

இவ்வாறு மனோஜ் வாழ்க்கையில் மீண்டும் ஜீவா வரும் போது, ரோகிணிக்கு என்ன பிரச்சனை காத்திருக்கிறது அல்லது ரோகிணி பற்றிய  உண்மைகள் மனோஜ்க்கு தெரிய வருகிறதா என்று சிறகடிக்க ஆசை சீரியலில் புது வைக்கப்பட்டுள்ளது. எனவே பொறுத்து இருந்து பார்ப்போம். இனி இந்த சீரியல் எவ்வாறு நகரும் என்பதை.


Advertisement

Advertisement