• Mar 08 2026

‘சரஸ்வதி’ மூலம் புதிய அத்தியாயம் தொடங்கும் வரலட்சுமி சரத்குமார்!

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகை வரலட்சுமி சரத்குமார் ‘சரஸ்வதி’ எனும் திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார். நடிகையாக பல்வேறு கதாபாத்திரங்களில் முத்திரை பதித்துள்ள வரலட்சுமி, தற்போது இயக்குநர் அவதாரத்தில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த படம் தொடர்பான முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகும் என வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தான் நடிகையாகவும் இயக்குநராகவும் செயல்படும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒரு சுவாரசியமான வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு திருமணம் செய்துகொண்ட அவர், தற்போது சினிமாவில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

தங்கை பூஜா சரத்குமாருடன் இணைந்து, ‘தோசா டையரீஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள வரலட்சுமி, அதனூடாக ‘சரஸ்வதி’ படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் நவீன் சந்திரா, பிரகாஷ் ராஜ், பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கும் இந்த படம், நடிகை வரலட்சுமியின் திரையுலகப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement