தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை சொல்லும் முறையால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் ரத்னகுமார், தற்போது தனது புதிய திரைப்படமான “29” மூலம் மீண்டும் ரசிகர்களை கவர தயாராக உள்ளார். “மேயாத மான்” திரைப்படத்தின் மூலம் இளம் தலைமுறையினரிடையே பிரபலமான அவர், அதன்பின் பல முக்கிய படங்களில் கதையாசிரியராகவும் பணியாற்றி கவனம் பெற்றார்.
இந்நிலையில், அவர் இயக்கியுள்ள புதிய படம் “29” சமீபத்தில் தனது படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

“29” திரைப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று, இதன் தயாரிப்பு. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான லோகேஷ் கனகராஜ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
“29” திரைப்படத்தில் நாயகனாக விது நடித்துள்ளார். இளம் நடிகராக வளர்ந்து வரும் விதுவுக்கு இது ஒரு முக்கியமான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே சில திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களின் மூலம் கவனம் பெற்றவர். இந்த ஜோடி திரையில் எப்படி இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் காதலர் வாரத்தின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்படும் Promise Day-ஐ முன்னிட்டு, படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!