நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் இணைந்து அடிக்கடி பயணங்கள் மேற்கொண்டு வருவது கவனம் பெற்றுள்ளது. ஆர்த்தியுடன் விவாகரத்து செய்வதாக அறிவித்த பின்பு, கெனிஷாவுடன் இணைந்து ஹீலிங் சென்டர் தொடங்க உள்ளதாக ரவி மோகன் அறிவித்திருந்தார். அதற்காக இருவரும் இந்தியாவில் கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கும், வெளிநாடுகளில் இலங்கை போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது அவர்கள் இருவரும் இந்தோனேஷியாவின் பாலி தீவுக்கு சென்றுள்ளனர். அங்கு அமைந்துள்ள பிரபலமான ஒரு ஆன்மீக வழிபாட்டுத் தலத்தில் தெய்வ வழிபாடு மேற்கொண்டுள்ள வீடியோவை கெனிஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், “நாங்கள் தெய்வத்திடம் சரணடைந்தோம். இந்த இடம் உடலை அல்ல, ஆன்மாவைத் தொடும். ஆன்மீக குளியல் எங்களுக்கு மன அமைதியை கொடுத்தது. இணைந்து சிரித்தது மன அழுத்தத்தை குறைத்தது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஓம் நமச்சிவாயா” என்று கூறினால் கடவுள் நிம்மதி தருவார் என கெனிஷா கருத்துப் பதிவிலும் குறிப்பிட்டுள்ளார். வீடியோவில் வழிபாட்டுக்காக மலர்களுடன் கெனிஷா செல்லும் காட்சிகளும், ரவி மோகனுடன் இணைந்து வழிபடும் தருணங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், அந்த இடம் எங்கு உள்ளது என்ற கேள்வியையும் பலர் எழுப்பி வருகின்றனர். கடந்த ஆண்டு தனது பிறந்தநாளின்போதும் கெனிஷா இதே போன்ற ஆன்மீகத் தலத்திற்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Listen News!