சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கு அவர் காதலித்த நிக்கோலாய் சத்தேவ் என்பவரையே இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுடைய திருமணம் படு பிரம்மாண்டமாக நடைபெற்றது. சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.
மும்பையைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபராக திகழும் நிக்கோலாய், பிரபல ஆர்ட் கேலரி ஒன்றை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு மும்பையில் நல்ல செல்வாக்கு உள்ளது. இவருக்கு தொழிலதிபர்கள் மட்டுமின்றி பாலிவுட் நடிகை, நடிகர்கள் பலரும் நல்ல பழக்கமாக காணப்படுகின்றார்கள்.
எனினும், நிக்கோலாய் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து அவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அவருக்கு 16 வயதில் ஒரு மகளும் உள்ளார். இப்படியான சூழ்நிலையிலேயே வரலட்சுமியின் காதல் சரத்குமார் குடும்பத்தினருக்கும் தெரிய, அவர்களும் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டினார்கள்.
இதை தொடர்ந்து இவர்களது திருமணம் தாய்லாந்தில் நடைபெற்று முடிந்தது. அதில் உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டார்கள். இவர்களது திருமண செலவு மட்டும் 800 கோடி என பேசப்பட்டது. ஆனாலும் அந்த தகவல் பொய் என சரத்குமார் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், பிரபல மருத்துவரும் திரை விமர்சகருமான காந்தராஜ் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வரலட்சுமியின் திருமணம் தாய்லாந்தில் நடந்ததை பற்றி விமர்சித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், சினிமாவில் இருக்கும் நடிகர் விளம்பரம் தான் தேடுகின்றார்கள். ஏன் இங்க எல்லாம் கல்யாண மண்டபமே இல்லையா? தண்டையார் பேட்டையில் நடக்க வேண்டிய கல்யாணத்தை ஏன் தாய்லாந்தில் செய்தார்கள்.
எல்லாம் விளம்பரம் தான். அப்பொழுதுதான் அவர்களைப் பற்றி தொடர்ந்து பேசுவார்கள். இல்லையென்றால் கல்யாணத்தில் என்ன கிக் இருக்கின்றது என பேசியுள்ளார்.
 
                              
                             
                             
                            _66b08bafb20a6.jpg) 
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!