• Jan 19 2025

ஓடாத படத்திற்கு இந்த விளக்கம் தேவையா? விஜய் ஆண்டனி வெளியிட்ட அவசர அறிக்கை

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன். இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி உலக அளவில் வெளியானது. 

இந்தப் படம் ரிலீஸ் ஆனதும் அதன் முதல் காட்சியை பார்த்த இயக்குனர் வேதனையுடன் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், நான் இந்த படத்தில் பல டுவிஸ்ட் வைத்து இயக்கி இருந்தேன். ஆனால் அதன் ஆரம்பத்தில் இடம்பெற்ற இரண்டு நிமிடக் காட்சி அந்த படத்தின் டுவிஸ்ட் அனைத்தையுமே சொல்லி விட்டது. அந்த காட்சியை நான் வைக்கவில்லை எனது அனுமதி இல்லாமல் அந்த காட்சி இடம்பெற்றுள்ளது என தனது மனக்குமுறல்களை வெளியிட்டு இருந்தார்.

மேலும் இந்த படத்தை பார்த்து விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன், இயக்குனர் தனக்குத் தெரியாமல் இரண்டு நிமிட காட்சி இடம் பெற்றிருக்கும் என்ற விஷயத்தை சுட்டி காட்டியதோடு விஜய் ஆண்டனி நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளர், படத்தொகுப்பு, டைரக்ஷன் என அனைத்திலும் மூக்கை நுழைத்து வருவதால் அவர்தான் இது போன்ற காட்சியை வைத்திருக்கலாம் என்ற தோணியில் பேசியிருந்தார்.


இந்த நிலையில் தற்போது இதற்கு விளக்கம் கொடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. அதில் அது நான் இல்லை என ஹெட்லைன் சேர்த்திருப்பதோடு மழை பிடிக்காத மனிதன் படத்தின் ஆரம்பத்தில் இரண்டு நிமிட காட்சியை தனது அனுமதி இன்றி யாரோ இணைத்துள்ளதாக என் நண்பர் படத்தின்  இயக்குனர் விஜய் மில்டன் வருத்தம் தெரிவித்து இருந்தார். அது நான் இல்லை இது சலீம் 2 இல்லை எனவும் அந்த அறிக்கையில்  குறிப்பிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஆனாலும் இதை பார்த்த ரசிகர்கள் ஓடாத படத்திற்கு இந்த விளக்கம் தேவையா என கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.


Advertisement

Advertisement