• Oct 09 2024

சன் டிவி ஷோவில் திடீரென பெப்சி விஜயன் காலில் விழுந்த வடிவேலு? அதிர்ச்சியில் ரசிகர்கள்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போட்டுத் தள்ளும் விதத்தில் அந்த நிகழ்ச்சி போலவே ஒரு சில மாற்றங்களுடன் சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற சமையல் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவியில் இருந்து விலகிய வெங்கடேஷ் பட் நடுவராக உள்ளார்.

விஜய் டிவியில் கடந்த சீசனில் கோமாளியாக கலந்து கொண்ட ஜிபி முத்து, சிங்கர் பரத் ஆகியோர் தற்போது டூப் குக் ஆக சன் டிவியில் இணைந்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சியை மோஷன் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது. அத்துடன் இந்த நிகழ்ச்சியை ராகேஷ் தொகுத்து வழங்க, இதில் சிங்கம்புலி, சுஜாதா, சிவக்குமார், சாய் தீனா, பெப்சி விஜயன், சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தாத்தா, சைத்தாரா ரெட்டி, நரேந்திர பிரசாத், ஷாலி நிவிகாஷ் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளார்கள்.


இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் கெஸ்ட்டாக அழைக்கப்பட்ட வடிவேலு, அங்கு போட்டியாளராக இருந்த பெப்சி விஜயனின் காலில் விழுந்து வணங்கியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


இதன்போது அவரைப் பற்றி பேசிய வடிவேலு, அண்ணன் விஜயன்  மாஸ்டர் எனக்கு மிகவும் முக்கியமானவர். அவருக்கு இல்லாத திறமைகளை இல்லை. அவர் பலமொழிகளை பேசக் கூடியவர். அதேபோல நிறைய புத்தகங்களை படிப்பார். சண்டையில் மட்டுமில்லாமல் நடிப்பில் இவர்தான் எனக்கு குருநாதர். அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அதேபோல சிங்கம் புலி அண்ணனும் இங்கு வந்துள்ளார். அவருக்கும் நடிப்பில் மட்டுமில்லாமல் நிறைய திறமைகள் உண்டு என பாராட்டி பேசி உள்ளார்.

Advertisement