• Jan 19 2025

ஆனந்திக்கும் நந்தாவுக்கும் அரங்கேறும் திருமணம்.. எதிர்ப்பாராத திருப்பத்தில் சிங்கப்பெண்ணே..!!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே சீரியல் விறு விறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் இடத்தை பெற்று வருகின்றது.

கடந்த வாரம் ஒளிபரப்பான எபிசோட்டில் உண்மையான அழகன் யார் என்பதை ஆனந்தி தெரிந்து கொள்வாரா? என்ற கான்செப்ட்டை ட்விஸ்ட் மேல ட்விஸ்ட் வைத்து ஒளிபரப்பாகி இருந்தார்கள்.

இந்த வாரமும் அதற்கு ஒரு படி மேலான கான்செப்டை தான் வைத்துள்ளார்கள். ஆனந்தியை உருகி உருகி காதலித்த அன்பு நேரில் தன்னை தெரியப்படுத்தாமல் அழகர் கேரக்டரில் போனில் மட்டும் மட்டும் பேசி வருகிறார்.


இதைத் தெரிந்த மித்ரா அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள அந்த அழகன் கேரக்டர் நான் தான் என நம்ப வைக்க நந்தாவே உள்ளே கொண்டு வருகிறார். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் மகேஷ் அவருடைய அப்பா, அம்மாவின் கல்யாண நாள் கொண்டாட்டத்தின் போது ஆனந்தியை திருமணம் செய்து வைக்க கேட்டுள்ளார். அந்தத் திட்டத்தையும் மித்ராவிடம் சொல்லிவிட அந்த கல்யாண திருவிழா முன்னாடியே மகேஷ் ஆனந்தியை வெறுக்க வைக்கும் அளவிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நந்தாவுக்கு உத்தரவு போட்டுள்ளார். இதனால் நந்தா அந்த கல்யாண கொண்டாட்டத்திற்கு முன்பே ஆனந்திய திருமணம் செய்ய பிளான் போட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில், நந்தா மித்ராவிடம் அந்த கல்யாண நாள் பார்த்து வருவதற்குள் நான் ஆனந்தியை திருமணம் செய்து காட்டுகிறேன் என தன்னுடைய திட்டத்தை சொல்லி விடுகிறார். அதற்கு ஏற்ற மாதிரி ஆனந்தியிடம் போய் நாம இருவரும் மலைக்கோயிலில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொல்ல, ஆனந்தி வழக்கம் போல முழித்துக் கொண்டிருக்கின்றார். இவர்கள் இருவரும் பேசுவதை அன்பு பார்த்து விடுகிறார்.

அதே நேரத்தில் நந்தாவாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் அருணை தேடி கம்பெனிக்கு யாரோ வருவது போலவும், அவனின் போட்டோவை காட்டி விசாரிப்பது போலவும் இன்றைய ப்ரோமோ முடிந்துள்ளது. எனவே நந்தா யார் என்று உண்மையை அன்பு கண்டுபிடிப்பாரா? ஆனந்தி திருமணத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement