• Feb 05 2026

‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா.? வெளியான அப்டேட்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் ஆக்டிங், திரைக்கதை மற்றும் வினோதமான ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்த ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான ஹாலிவுட் மற்றும் பாலிவுட் கலவையான திரைப்படம் ‘துரந்தர்’ கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இப்படம் இந்தியாவிலும், உலகளாவிய சந்தைகளிலும் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. 

‘துரந்தர்’ படம் வெளியான பிறகு, ரசிகர்கள் இதன் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து உற்சாகமாக காத்திருந்தனர். முன்னாள் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களின் மனதில் நிறைந்திருந்ததால், தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவெடுத்தனர். 


இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ (Dhurandhar: The Revenge) படத்தின் தயாரிப்பு பணிகள் கிட்டத்தட்ட  முடிவுக்கு வந்த நிலையில், மார்ச் 19ஆம் தேதி உலகளாவிய ரீதியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது. இந்த டீசர், ரசிகர்களுக்கு படத்தின் கதையின் பரிமாணங்களை, நடிகர்களின் புதிய அவதாரங்களை மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை வெளிப்படுத்தும் என நம்பப்படுகிறது. 

Advertisement

Advertisement