• Feb 12 2026

தூய்மைப் பணியாளருக்கு தங்க சங்கிலி பரிசளித்த நடிகர் ரஜினிகாந்த்.. ஏன் தெரியுமா?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சமீபத்தில் சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகையை நேர்மையாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் பத்மாவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அவரது இந்த செயல் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது.

சென்னையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளராக பணியாற்றி வரும் பத்மா, வழக்கம்போல் தனது பணியை மேற்கொண்டபோது சாலையோரத்தில் கிடந்த தங்க நகைகளை கண்டெடுத்துள்ளார். அவை சுமார் 45 சவரன் எடையுள்ள தங்க நகைகள் என தெரியவந்தது. 

உடனடியாக அதனை காவல்துறையினரிடம் ஒப்படைத்த அவர், நகையின் உரிமையாளரை கண்டறிய உதவி செய்துள்ளார். பின்னர் உரிமையாளரிடம் அந்த நகைகள் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன.


இந்த நேர்மையான செயல்பாடு குறித்து அறிந்த நடிகர் ரஜினிகாந்த், பத்மாவை நேரில் சந்தித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் அவரது நேர்மை மற்றும் சமூக பொறுப்பை கௌரவிக்கும் வகையில், ரஜினிகாந்த் பத்மாவிற்கு தங்க சங்கிலி ஒன்றை பரிசாக வழங்கினார். அதோடு, அவரது செயல்பாடு பலருக்கும் முன்மாதிரியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நடிகர் ரஜினிகாந்தின் இந்த மனிதநேயமான செயல், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. பலரும் இது பத்மாவின் நேர்மைக்கு கிடைத்த பரிசு என அவரையும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement