• Apr 16 2026

அனிமல் திரைப்பட நடிகையின் அப் கம்மிங் மூவிஸ்.. லிஸ்ட் ரொம்ப நீளுதே..!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

2016 ஆம் ஆண்டில் கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படம் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா திரையுலகில் அறிமுகமானார். இது கன்னடத்தில் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது.

ராஷ்மிகா பல பிரம்மாண்டமான படங்களில் ஹீரோயினாகவும், சில பெண்களை மையமாகக் கொண்ட கதைகளிலும் இப்போது நடித்து வருகிறார். தற்போது ராஷ்மிகா நடிக்க கமிட்டாகி உள்ள திரைப்படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

d_i_a

அதன்படி அவர் புஷ்பா 2, குபேரா, சாவா, சிகந்தர் போன்ற படங்களில் கதாநாயகியாகவும் ரெயின்போ , தி கேர்ள்பிரண்ட் ஆகிய பெண்களை  மையமாகக் கொண்ட படங்களிலும் நடிப்பதற்காகவும் கமிட் ஆகியுள்ளதாக அவரது செய்தி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த படங்கள் மூலம் ராஷ்மிகா மந்தனா திரையுலகில் தனது நிலையை மேலும் வலுப்படுத்துவதற்காக தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் விமர்சன ரீதியாக படுமோசமாக விமர்சிக்கப்பட்டாலும் வசூலில் 900 கோடிகளை கடந்து சாதனை படைத்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement