• Jan 19 2025

இதுக்கு தான் இவ்வளவு செலவு செய்தாரா? கமல் ரசிகர்களை ஏமாற்றிய கலைப்புலி தாணு?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’ஆளவந்தான்’ திரைப்படம் மீண்டும் எடிட் செய்யப்பட்டு திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்படும் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கலைப்புலி தாணு அவர்கள் ஒரு சில பேட்டிகளில் தெரிவித்து இருந்தார். இதற்காக சில லட்சங்கள் செலவு செய்யப்பட்டதாகவும் ரீமாஸ்டர் செய்யப்பட்டு இந்த படம் புத்தம் புது பொலிவாக வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இந்த படத்தை காத்திருந்தனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ’ஆளவந்தான்’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் சில ஆண்டுகள் கழித்து இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பதும் அந்த படம் குறித்து ஹாலிவுட் இயக்குனர்கள் கூட சில ஆச்சரியமான தகவல்களை தெரிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரீரிலீஸ் ஆகும் படங்கள் நல்ல வெற்றியை பெற்று வரும் நிலையில் ’ஆளவந்தான்’ திரைப்படம் ரீரிலீஸ் ஆனால் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது திடீரென தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இந்த படத்தை அமேசான் ப்ரைமுக்கு விற்பனை செய்து விட்டதாக தெரிகிறது.

’ஆளவந்தான்’ திரைப்படம் அமேசான் தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர், இந்த படத்தை பெரிய திரையில் பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் புத்தம் புது பொலிவுடன் வித்தியாசமாக அமேசானில் இந்த படம் வந்திருப்பதால் மிகுந்த ஆர்வத்துல இந்த படத்தை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement