• Jan 19 2025

இன்று சிஎஸ்கே - பெங்களூரு ஐபிஎல் போட்டி.. கமல்-ஷங்கர் செய்யப்போகும் தரமான சம்பவம்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

இன்று பெங்களூரு மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது என்பதும் இன்றைய போட்டி இரு அணிகளுக்கு மிகவும் முக்கியம் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டியில் வெல்லும் அணியே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அதிகப்படுத்தி கொள்ளும் என்பதால் இன்றைய போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு முறையும் சிஎஸ்கே போட்டி நடைபெறும் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் திரை உலக பிரபலங்களை நேரில் வரவழைத்து பேட்டி எடுத்து வருவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இன்றைய சிஎஸ்கே மற்றும் பெங்களூர் போட்டியின் போது கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் ஆகிய இருவருமே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் தோன்ற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல், ஷங்கர் ஆகிய இருவரும் இன்றைய நிகழ்ச்சியில் தங்களுடைய சிறு வயது கிரிக்கெட் அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் இன்றைய போட்டி குறித்து தங்களது விமர்சனங்களை தெரிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் மீண்டும் இணைந்த ’இந்தியன் 2’ படப்பிடிப்பு முடிந்து வரும் ஜூலை மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் இன்று வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி சினிமா ரசிகர்களுக்கும் குஷியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.


Advertisement

Advertisement