• Jan 19 2025

செல்லும் இடமெல்லாம் அசிங்கப்பட்ட கோபி.. ஈஸ்வரிக்கு கிடைத்த வார்னிங்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், இனியாவுக்காக பாக்கியா, ஈஸ்வரி மற்றும் ராம மூர்த்தி ஆகியோர் பிரின்சிபலிடம் காலில் விழாத குறையாக கெஞ்சி அவரை மீண்டும் ஏற்றுக் கொள்ளும்படி சொல்லுகின்றார்கள்.

இதன் போது இனியாவின் அப்பா எங்கே என கேட்க, அதற்கு ஈஸ்வரி அவன் பொறுப்பில்லாமல் ஊதாரித்தனமாக இன்னொரு கல்யாணம் பண்ணிட்டான். அம்மா அப்பாவையும் கவனிக்கல பிள்ளையையும் கவனிக்கல பாக்கியா தான் எல்லாத்தையும் கவனித்துக் கொண்டிருக்கின்றார் என சொல்கின்றார்.

இறுதியில் பாக்கியாவுக்காக இனியாவை மன்னித்து காலேஜில் ஏற்றுக் கொள்கிறார். அதன்பிறகு கோபி அங்கு செல்லவும்,  உங்களால தான் இனியா இப்படி இருக்கா உங்களுக்கு பொறுப்பே இல்லையா என்று கண்டபடி பேசுகின்றார்.


இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த கோபி எதற்காக பிரின்சிபாலிடம் இப்படி சொன்னீர்கள் என ஈஸ்வரியிடம் கேட்க, உண்மையைத்தானே சொன்னோம் என சொல்கின்றார்கள். ஆனாலும் இனியாவுக்கு அப்பா இல்லை என்று சொல்லுற உரிமை யாருக்கும் இல்லை என சொல்ல, பாக்கியா அவரை திட்டி அனுப்புகிறார்.

அதன் பின்பு ராதிகா வீட்டுக்கு வந்த கோபி, தலையில் கையை வைத்துக் கொண்டிருக்க, ராதிகா என்ன நடந்தது என கேட்கின்றார். கோபி நடந்தவற்றை சொல்லவும், இது இல்ல இதுக்கு மேலவும் உங்களுக்கு வேணும் என்று சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement