• May 11 2024

TVK கட்சியின் வாட்சப் நம்பரும் முடங்கியது! FIRST இதை கரெக்ட் பண்ணுங்க..! அவசர அறிக்கையை வெளியிட்ட விஜய்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில்  அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து கட்சிக்காக பல தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலில் ஒன்றை அறிமுகம் செய்து வைத்தார். முதல் உறுப்பினராக தானே இணைந்து கொண்டு அதற்கான வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

இதை அடுத்து ஒரு சில மணி நிமிடங்களிலேயே குறித்த செயலியில் பல்லாயிரக்கணக்கான ரெக்குவஸ்ட் குவிந்த நிலையில், அந்த செயலி முடக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இன்றைய தினம் 50 லட்சத்துக்கு அதிகமானோர் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக சேர்ந்துள்ளார்கள்.


இந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வாட்சப்  நம்பரும் முடங்கியுள்ளதாம்.

அதாவது நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக வாட்சப் எண்ணில் இணைவதற்கு பலர் மெசேஜ் அனுப்பி உள்ளார்கள். இதனால் எந்த வித பதிலும் வராமல் இருந்துள்ளது.

அதன்பின், தமிழக வெற்றி கழகத்தின் வாட்சப் நம்பரும் முடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி குறித்த அறிக்கை வருமாறு, 

மன்னிக்கவும்... வாக்காளர் அடையாள அட்டை இருப்பது முக்கியமில்லை. வாக்காளர் பட்டியலில் நமது பெயர் உள்ளதா? அல்லது விடுபட்டு உள்ளதா? என்பதை சரி பார்த்து கொள்ள வேண்டும். பலர் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இருக்கிறார்கள். ( VOTER HELPLINE ) என்கிற இந்த செயலியில் சென்று உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

இந்த வாக்காளர் அடையாள அட்டை விவரங்கள் தற்போது எங்களுக்கு கிடைக்கவில்லை ( Sorry.... this voter id details is not currently available to us). இது போல் தகவல் வந்தால் ( VOTER HELPLINE ) என்கிற இந்த செயலி அல்லது இணைய தளம் சென்று உங்கள் Voter ID, வாக்காளர் பட்டியலில் (Electoral Roll) உள்ளதா என்று சரி பார்க்கவும். உங்களின் Voter ID இருந்தால், நம் செயலி அற்புதமாக உங்கள் தகவலை கொண்டு வரும் (it fetches data in less than a sec) வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் இந்த செயலில் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்... என்று குறிப்பிட்டுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement