• Jan 19 2025

சீமான் ஒரு அடி முட்டாள்.. காரி துப்புங்க...! மீண்டும் மிரட்டல் வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குநராக இருந்து, தற்போது அரசியல் கட்சி தலைவராக இருப்பவர் தான் சீமான். 

இவர் இயக்குநராக இருந்தபோது அவர் படத்தில் நடித்த விஜயலட்சுமி என்ற நடிகையுடன் பழக்கம் ஏற்பட, அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றி விட்டதாக விஜயலட்சுமி தொடர்ந்தும் புகார் கொடுத்து வந்தார்.

பல ஆண்டுகளாக இவர்களுக்கு இடையிலான மோதல் நீடித்து  வருகிறது. கடைசியாக இவர் சீமான் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்று தான் வசிக்கும் இடத்திற்கே திரும்பிச் சென்றிருந்தார்.

ஆனாலும் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர், தமிழ்நாடு மீடியாக்களே... என் கணவர் சீமானை என்னோடு சேர்த்து வையுங்கள் என வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.


இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

நான் இரண்டு நாளைக்கு முதல் ஒரு வீடியோ போட்டு இருந்தன். அந்த வீடியோவ பார்த்த தமிழ்நாட்டு மீடியாவில் இருக்கக்கூடிய எல்லாருமே திரண்டு, சீமானை காரி துப்பின்னு இருக்கணும் இல்லையா.

அந்த பொண்ணு பாவம். எதாவது முன்ன பின்ன ஆயிடுச்சுன்னா பாரஸ்ட் ஆனா அவங்க அக்காவுக்கு யார்ரா இருக்காங்க, அப்படின்னு எல்லாருமே சீமானை காரி துப்பி இருக்கனும் இல்லையா? ஆனா என்னப்பா பண்ணிட்டு இருக்கீங்க. விஜயலட்சுமி எப்போ சாவா? சீமானை எப்போ கைது பண்ணலாம் என்று பாத்திட்டு இருக்கீங்களா?


இப்போ சொல்லுறன். சீமான் ஒரு அடி முட்டாள்.  சீமான் அவர்களே.. நீங்க நினைச்சுட்டு இருக்கீங்க இது ஏதோ திமுகவோட அடுத்த சதி, ஒரு நாலு மாத்திரை போட்டுட்டு போய் மருத்துவமனை படுக்க சொல்லி இருக்காங்க அதனால தான் இப்படி  டிராமா போட்டுட்டு இருக்கா என்று... ஆனா இன்னிக்கு வந்து என்னோட போராட்டம் ரொம்ப தீவிரமாக போகுது. சாப்பாடு விட போறன்,  தண்ணி விட போறன்,  என்ன பண்ணா நான் சாவனோ அதெல்லாம் பண்ண போறன்.

எப்படியோ சாகணும்னு டிசைட் பண்ணிட்டன். ஆனா உங்களை எல்லாம் அம்பலபடுத்திட்டு தான் போவன். அதனால இது எந்த டிராமாவும் கிடையாது. இது உண்மையான ஒரு நிகழ்வுதான் கொஞ்சம் கொஞ்சமா நான் எப்படி சாகப் போறேன் அப்படின்னு நீங்க பார்க்க தான் போறீங்க. அதை நீங்க தடுத்தா தான் வந்து பாசிபிள் மிஸ்டர் சீமான்.

மேலும், இப்போ 24 தூக்கு மாத்திரை இருக்க கூடிய டப்பா என்கிட்ட இருக்கு. இது இன்னைக்கு கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா இரவுக்குள்ள சாப்பிட்டு முடிச்சு நாளைக்குள்ள நான் இருக்க கூடாது என சொல்லி உள்ளார். தற்போது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement