• Aug 31 2026

ஜீ தமிழின் ஹிட் சீரியலுக்கு வந்த சோதனை.. பாதியிலேயே முடிகின்றதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

சீரியல்களுக்கு பெயர்போன சன் டிவி, ரியாலிட்டி ஷோக்களில் முன்னணியில் இருக்கும் விஜய் டிவி ஆகியவற்றுக்கு போட்டியாக தற்போது ஜீ தமிழ் சேனலும் தொடர்ந்து பல புதிய நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை களமிறக்கி வருகிறது.

அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக கார்த்திகை தீபம், வீரா, சின்னஞ்சிறு கிளியே உள்ளிட்ட தொடர்கள் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


இந்நிலையில், ஜீ தமிழில் தற்போது ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் ஒன்று விரைவில் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு வைஷ்ணவி மற்றும் அருண் ஆகியோர் நடிப்பில் ‘வீரா’ என்ற சீரியல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களால் ரசிகர்களிடம் இந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

குறிப்பாக வைஷ்ணவி மற்றும் அருண் இணைந்து நடித்த ஜோடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இதனால் சீரியலின் அடுத்தடுத்த திருப்பங்கள் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகின. முதல் பாகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.

இந்நிலையில், தற்போது ‘வீரா’ சீரியல் விரைவில் நிறைவடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement