• Sep 13 2024

த்ரிஷாவை எப்படியாவது கூட்டிகிட்டு வாங்க.. தமிழ் இயக்குனரிடம் கெஞ்சும் சல்மான்கான்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகை த்ரிஷா தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிஸியாக இருக்கும் நிலையில் சல்மான்கான் அடுத்த படத்தில் அவர் தான் நாயகி என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை த்ரிஷா தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’தக்லைஃப்’, அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ விஜய் நடித்து வரும் ‘கோட்’, மோகன்லால் நடித்து வரும் ’ராம்’ டொவினோ தாமஸ் நடித்து வரும் ’ஐடென்டிட்டி’ சிரஞ்சீவி நடித்து வரும் ’விசுவாம்பரா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி ஒரு வெப் தொடர் உள்பட சில படங்களிலும் நடித்து வரும் நிலையில் மேலும் சில படங்களில் அவர் கமிட்டாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சல்மான் கான் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் நாயகியாகவும் நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் எப்படியாவது த்ரிஷாவை இந்த படத்தில் நடிக்க வைக்க ஒப்புக்கொள்ள வையுங்கள் என்று ஏ ஆர் முருகதாஸிடம் சல்மான்கான் கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே த்ரிஷா ஒரு சில இந்தி படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் அவருக்கு கை கொடுக்காத நிலையில் தற்போது மீண்டும் இந்தியில் சல்மான்கான் உடன் நடிக்க இருப்பதால் அவர் மீண்டும் பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தத்தில் கிட்டத்தட்ட 40 வயதிலும் ஒரு பான் இந்திய நடிகையாக த்ரிஷா  வலம் வந்து கொண்டிருப்பதை அடுத்து அவரை பார்த்து சக நடிகைகள் பொறாமைப்பட்டு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement